2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

செயற்குழுக் கூட்டம்: திகதி குறிப்பிடாது ஒத்திவைப்பு

Editorial   / 2018 டிசெம்பர் 28 , மு.ப. 09:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுக்கூட்டம், திகதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்தக் கூட்டம், கட்சியின் தலைவர், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் ​தலைமையில், நேற்றுமாலை (27) நடத்துவதற்கு ஏற்கெனவே ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.   

கடந்த 21 ஆம் திகதி இடம்பெற்ற செயற்குழுக்கூட்டத்தின் போது, கட்சியின் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் தொடர்பில், நேற்றைய கூட்டத்தில் ஆராய்வதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்தது.   

இந்நிலையில், பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜயவர்தன தலைமையிலான குழுவினரினால் தயாரிக்கப்பட்டுள்ள, கட்சி மறுசீரமைப்பு தொடர்பிலான அறிக்கை, நிதி மற்றும் ஊடகத்துறை இராஜாங்க அமைச்சர் இரான் விக்ரமரத்னவினால் ஆராய்வதற்கும் கடந்த கூட்டத்தின் போது, யோசனையொன்று நிறைவேற்றப்பட்டிருந்தது.   

எனினும், தவிர்க்கமுடியாத சில காரணங்களினால், செயற்குழுக்கூட்டத்தை நேற்றுமாலை நடத்தமுடியாமல் போய்விட்டதாக, கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .