Editorial / 2025 ஓகஸ்ட் 05 , மு.ப. 11:21 - 0 - {{hitsCtrl.values.hits}}

தனது சேவல்களில் ஒன்றை கவ்விச் சென்று கடித்துக் கொன்ற ஒரு பெண் நாயை, கோழி உரிமையாளர் துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற சம்பவம், மொனராகலை படல்கும்புர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாலிகத்தென்ன பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (03) இடம் பெற்றுள்ளது.
கொல்லப்பட்ட வீட்டின் அருகே காணப்பட்ட பெண் நாய்க்கு, 4 குட்டிகள் உள்ளன. சந்தேக நபரின் காணியில் சுற்றித் திரிந்த ஒரு சேவலை அந்த நாய் பிடித்து, அதைக் கொன்று குட்டிகளுக்கு எடுத்துச் சென்றுள்ளது.
சந்தேக நபர் சேவலை காணாமல் அந்தப் பகுதியில் நடத்தப்பட்ட தேடுதலின் போது கொல்லப்பட்ட சேவல் கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் கோபமடைந்த கூலித்தொழிலாளியான 42 வயதான நபர், வீட்டுக்குள் சென்று, துப்பாக்கியை எடுத்து வந்து, பெண் நாயை சுட்டுக் கொன்றுள்ளார்.
இந்தச் சம்பவம் குறித்து பொலிஸூக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, கொல்லப்பட்ட பெண் நாயின் உடல் படல்கும்புர கால்நடை மருத்துவ அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டு பிரேத பரிசோதனை நடத்தப்பட்டது. பெண் நாயின் உடலில் மூன்று சன்னங்கள் காணப்பட்டன.
நாயைக் கொன்ற நபர் சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளார், மேலும் அவரைக் கைது செய்ய படல்கும்புர பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சுனில் திசாநாயக்க விசாரணைகளை மேற்கொண்டு வருகிறார்.
16 minute ago
25 minute ago
33 minute ago
50 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
25 minute ago
33 minute ago
50 minute ago