Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2017 நவம்பர் 22 , மு.ப. 08:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
“முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, நாடாளுமன்றத்துக்கு, சைக்கிளில் வரும் நிலைமைக்கு, அவரைச் சூழ்ந்திருந்தவர்களே தள்ளிவிட்டுவிட்டனர்” என, ஐக்கிய தேசியக் கட்சியின் கண்டி மாவட்ட எம்.பியான ஆனந்த அளுத்கமகே சுட்டிக்காட்டினார்.
நாடாளுமன்றத்தில் நேற்று (21) நடைபெற்ற நெடுஞ்சாலைகள் மற்றும் உயர்கல்வி அமைச்சின் மீதான வரவு-செலவுத்திட்ட குழுநிலை விவாதத்தில், உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவருக்கு முன்னதாக, ஒன்றிணைந்த எதிரிணியின் எம்.பியான மஹிந்தானந்த அளுத்கமகே உரையாற்றினார். அவரது உரைக்குப் பதிலடி கொடுக்கும் வகையிலேயே, மேற்கண்ட கருத்தைத் தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
“2005ஆம் ஆண்டு, ஜனாதிபதித் தேர்தலின் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் அப்போதைய ஜனாதிபதி வேட்பாளர் மஹிந்த ராஜபக்ஷவை தோற்கடிப்பதற்காக, அப்போதைய ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவுடன் இணைந்து கொண்டு, அநுர பண்டாரநாயக்கவை பதவிக்குக் கொண்டு வருவதற்காக, மஹிந்தானந்த அளுத்கமகே செயற்பட்டிருந்தார்” என்றார்.
இதன்போது, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் சபையில் பிரசன்னமாகியிருந்தார்.
“தம்மை சூழ்ந்திருப்பவர்களாலேயே மஹிந்த ராஜபக்ஷ தோல்வியைச் சந்திக்க வேண்டி ஏற்பட்டிருந்தது. இறுதியில் நாடாளுமன்றத்துக்கு, சைக்கிளில் வரும் நிலை வரை அவர்கள், முன்னாள் ஜனாதிபதியைக் கொண்டு வந்துவிட்டனர்” என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
35 minute ago
36 minute ago
42 minute ago
51 minute ago