2025 மே 05, திங்கட்கிழமை

சொக்லேட்டால் வந்த விபரீதம்

Freelancer   / 2023 ஒக்டோபர் 02 , மு.ப. 09:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

பு.கஜிந்தன்

யாழ்ப்பாணத்தில் மாணவி ஒருவர் கொடுத்த சொக்லேட்டை வாங்கியதற்காக மாணவன் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

யாழ்ப்பாணத்தில் உள்ள பாடசாலையொன்றில் மாணவி ஒருவர் கொடுத்த சொக்லேட்டை வாங்கிய சக மாணவன் ஒருவன், மாணவியின் அண்ணனால் தாக்கப்பட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

13 வயதான குறித்த மாணவி சில தினங்களுக்கு முன்னர் தனது வகுப்பு மாணவர்களுக்கு சொக்லெட் வழங்கியுள்ளார். இதையடுத்தே எதற்காக சொக்லெட்டை வாங்கினாய்? என்று வினவி மாணவியின் 17வயதுடைய அண்ணன் அந்த மாணவன் மீது தாக்குதல் நடத்தியுள்ளார்.

மாணவியின் அண்ணனின் தவறான புரிதலே இந்தத் தாக்குதலுக்குக் காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் மருதங்கேணி பொலிஸாரிடம் முறைப்பாடு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X