S.Renuka / 2025 டிசெம்பர் 28 , பி.ப. 02:58 - 0 - {{hitsCtrl.values.hits}}

தற்போதைய அரசாங்கத்தின் 06 அமைச்சர்களுக்கு எதிராக பணச்சலவை சட்டத்தின் கீழ் அறிவிக்கப்படாத சொத்துக்கள் குறித்து விரிவான விசாரணையை தொடங்க இஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு முடிவு செய்துள்ளதாக சிங்கள இணைத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அதன்படி, அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் ஐவர் மற்றும் ஒரு பிரதி அமைச்சருக்கு எதிராக சொத்துக்கள் எவ்வாறு சேகரிக்கப்பட்டன என்பது குறித்து விசாரணை நடத்த ஆணைக்குழு முடிவு செய்துள்ளது.
அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களான பிமல் ரத்நாயக்க, வசந்த சமரசிங்க, குமார ஜெயக்கொடி, சுனில் ஹந்துன்னெத்தி, நளிந்த ஜெயதிஸ்ஸ மற்றும் பிரதி அமைச்சர் சுனில் வட்டகல ஆகியோருக்கு எதிராக இந்த விசாரணைகளை தொடங்க முடிவு செய்துள்ளதாக இஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு கூறுகிறது.
ஊழல் மற்றும் வீண்விரயத்திற்கு எதிரான குடிமக்கள் அதிகாரத்தின் தலைவர் ஜமுனி கமந்த துஷார ஆணைக்குழுவில் தாக்கல் செய்த முறைப்பாடு தொடர்பாக விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளன.
இது தொடர்பாக வாக்குமூலம் பெறுவதற்கு ஜமுனி கமந்த துஷார நாளை செவ்வாய்க்கிழமை (30) இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவில் ஆஜராகுமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார்.
1 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago