2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

சொத்துக்களை அபகரிக்கவே தொழிலாளர் இல்லத்துக்கு சேதம்

Ilango Bharathy   / 2021 செப்டெம்பர் 13 , மு.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

பெருந்தோட்ட மலையக மக்களின் சொத்துக்களை அபகரிக்கும் நோக்கிலேயே இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தொழிலாளர் இல்லம் சேதமாக்கப்பட்டதாக அதன் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான வடிவேல் சுரேஷ் தெரிவித்தார்.

இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைமை இல்லத்தை பலவந்தமாக
கைப்பற்றுவதற்கும் தொழிலாளர்களின் சொத்துக்களை சூறையாடும் நோக்கிலும் ஐக்கிய தேசியக் கட்சியின் ஒரு சிலர் முயற்சித்து வருகின்றனர் என்றார்.

இதுதொடர்பில் அவர் மேலும் கருத்துரைக்கையில், ஆயிரம் ரூபாய் சம்பள உயர்வுக்குப் பின்னதாக மலையக மக்கள் தொடர்ந்தும் பல பிரச்சனைகளுக்கு முகம் கொடுத்து கொண்டு வருகின்றனர்.

அவர்களுக்கு பக்கபலமாக அவர்களுடைய தொழில் பாதுகாப்பை உறுதி செய்யும் விதத்தில் இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம் தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது.

இந்நிலையில், தமது சங்கத்துக்குச் சொந்தமான சொத்துக்களையும் சங்கத்தின் தலைமை
இல்லத்தையும் அபகரிக்கும் நோக்குடன், மக்களால் நிராகரிக்கப்பட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் ஒரு சில முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள், கதவுகளை உடைத்து அத்துமீறி உட்புகுந்து அங்கிருக்கும் சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்தி இருக்கின்றார்கள்.

தொழிற்சங்கத்தின் அலுவலகத்தை அவர்கள் பொறுப்பேற்பதற்கு நீதிமன்றம்  அனுமதி
அளித்திருந்தால் சட்டரீதியாக அலுவலகத்தை பொறுப்பேற்க முடியும். அதனை தவிர்த்து
திருடர்கள் போல் உட்புகுந்து தொழிலாளர்களில் சொத்தை சுவீகரித்துக் கொள்வதற்கு திட்டம்
தீட்டி உள்ளார்கள்.

இன்று எங்களுடைய உயிரையும் பணயம் வைத்து மக்களின் சொத்துக்களை
காப்பாற்றிருக்கின்றோம். இந்த சங்கத்தின் பொதுச்செயலாளராக தான் இருக்கும் வரையில்,
மலையக மக்களின் சொத்தை சூறையாடுவதற்கு ஒருபோதும் இடமளிக்க மாட்டேன் என
தெரிவித்துள்ள வடிவேல் சுரேஸ், கொழும்பு மேல் நீதிமன்றம் சரியான தீர்ப்பை வழங்கும் என்று
நாம் எதிர்பார்க்கின்றோம் மேற்படி விடயம் தொடர்பாக ராஜகிரிய பொலிஸ் நிலையத்தில்
முறைப்பாடு செய்திருக்கின்றோம் என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X