Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 09, புதன்கிழமை
Editorial / 2018 நவம்பர் 13 , மு.ப. 05:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
மறைந்த சோமவன்சவினால் ஆரம்பிக்கப்பட்ட மக்கள் சேவை கட்சி, எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைந்து போட்டியிடுவதற்குத் தீர்மானித்துள்ளது.
அதற்கு அப்பால், கட்சியின் ஸ்தாபகரான மறைந்த சோமவன்ச அமரசிங்ஹவுக்காக, “சோமவன்ச அமரசிங்க மன்றம்” ஆரம்பிக்கப்பட்டுள்ளது என, கட்சியின் தலைவர் ஜயந்த விஜேசிங்ஹ தெரிவித்தார்.
“அரசியலுக்கு நுழைகின்ற இளைஞர், யுவதிகளுக்கு இந்த மன்றத்தின் ஊடாக அரசியல் அறிவை பெற்றுக்கொடுத்தல், நலன்புரி சேவைகளை முன்னெடுத்தல் மற்றும் கஷ்டங்களுக்கு மத்தியில் கல்விபயிலும் பிள்ளைகளுக்குத் தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தல் உள்ளிட்டவை முன்னெடுக்கப்படும்” என்றார்.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுடன் ஒப்பந்தம் கைச்சாத்திடப்ப ட்டுள்ளமையால், அடுத்த தேர்தலில், எமது கட்சியின் வேட்பாளர்களை, அந்த பெரமுனவின் சார்பில் நிறுத்துவதற்கு தீர்மாகிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்த அவர், தேர்தல்கள் சட்ட விதிமுறைகளை மீறாமலும் சுற்றாடலுக்குத் தீங்கு விளைவிக்காத வகையிலும் எதிர்கால நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு, கட்சியின் உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
2 hours ago