2025 ஓகஸ்ட் 27, புதன்கிழமை

ஜோன்ஸ்டனுக்கு எதிராக 5 வழக்குகள் தாக்கல்

Kogilavani   / 2016 மே 20 , மு.ப. 04:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோவுக்கு எதிராக, ஐந்து  வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இந்த வழக்குகளை, இலஞ்சம் மற்றும் ஊழல்களை விசாரிக்கும் ஆணைக்குழு, கொழும்பு மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை (19) தாக்கல் செய்தது.

2010ஆம் ஆண்டு முதல் 2014ஆம் ஆண்டு வரையான காலப்பகுதிகளில், கூட்டுறவு மொத்த விற்பனை நிலைய ஊழியர்கள் 45 பேரை, தனது தனிப்பட்ட மற்றும் அரசியல் நடவடிக்கைகளுக்காகப் பயன்படுத்தி, 401 இலட்சம்  ரூபாய்க்கும் அதிக பணத்தை நட்டப்படுத்தினார் என்று குற்றஞ்சாட்டியே, மேற்படி வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.

இதேவேளை, இந்த வழக்கு தொடர்பான விசாரணை ஜூன் மாதம் 30ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X