2025 ஓகஸ்ட் 23, சனிக்கிழமை

ஜனாதிபதி ஆஸ்திரியா சென்றடைந்தார்

Niroshini   / 2016 பெப்ரவரி 19 , மு.ப. 06:56 - 0     - {{hitsCtrl.values.hits}}


மூன்று நாட்கள்  உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு ஆஸ்திரியா சென்றிருக்கும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, நேற்று (18) வியன்னா சர்வதேச விமான நிலையத்தைச் சென்றடைந்தார்.

ஆஸ்திரியா நாட்டின் வெளிவிவகார அமைச்சரும் ஐரோப்பாவுக்கான சமஷ்டி அமைச்சின் பிரதம மரபுச்சீர்முறை அதிகாரியுமான கலாநிதி பெட்டினா கேர்ன்பவர் விமான நிலையத்தில் ஜனாதிபதியை வரவேற்றார்.

விமானநிலையத்திலிருந்து வியன்னாவிலுள்ள கெப்பின்ஸ்கி ஹோட்டலைச் சென்றடைந்த ஜனாதிபதி மற்றும் தூதுக்குழுவினரை ஆஸ்திரியாவுக்கான இலங்கைத் தூதுவர் பிரியானி விஜேசேகரவும் தூதரக அதிகாரிகளும் வரவேற்றனர்.

இந்த விஜயத்தின்போது, ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன ஆஸ்திரியாவின் சமஷ்டி ஜனாதிபதி ஹீன்ஸ் பிஷரை ஜனாதிபதி மாளிகையில் சந்தித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளவுள்ளார்.

அதன் பின்னர் ஆஸ்திரியாவின் வர்த்தக சங்கத்துக்கும் ஜனாதிபதி விஜயம் செய்யவுள்ளதுடன், அங்குள்ள இலங்கை சமூகத்தினரையும் சந்திக்கவுள்ளார்.

ஜனாதிபதியின் ஆஸ்திரியாவுக்கான இவ்விஜயமானது, இரண்டு நாடுகளுக்கிடையேயான இருதரப்பு உறவுகளை மேலும் பலப்படுத்த பெரிதும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X