2025 ஓகஸ்ட் 27, புதன்கிழமை

ஜனாதிபதி சட்டத்தரணிக்கு எதிராக வழக்கு

Kanagaraj   / 2015 டிசெம்பர் 01 , மு.ப. 03:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் பிரதி சொலிசிட்டர் ஜெனரலான, ஜனாதிபதி சட்டத்தரணி ரியன்சி அர்சகுலரத்னவின் அலைபேசி, நீதிமன்றத்துக்குள் அலறியமையால் அவருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

காலி மேல்நீதிமன்றத்தில், நீதிபதி கே.பீ.கே ஹிரிஓரேகமவினால், நேற்று திங்கட்கிழமை பிறிதொரு வழக்கொன்று விசாரணைக்கு உட்படுத்திகொண்டிருந்த போதே, ரியன்சியின் அலைபேசி அலறியுள்ளது.  

நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவிக்கப்பட்டதாகக் கூறியே, அவருக்கு எதிராக இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்குத் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை ஜனவரி 19ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X