2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

ஜனாதிபதி, பிரதமருக்கு அருகில் சென்ற இளைஞனுக்கு பிணை

George   / 2016 நவம்பர் 17 , மு.ப. 06:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

பண்டித் டபிள்யு. டீ அமரதேவவின் இறுதிக்கிரியையின் போது, சந்தேகப்படும் விதத்தில் நடந்துக்கொண்ட, ஊடகவியலாளர் என்று கூறப்படும் நபருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, ஆகியோரின் அருகில் வருவதற்கு முயற்சித்த குற்றச்சாட்டில் அவர் கைதுசெய்யப்பட்டிருந்தார்.

இன்றைய தினம் வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சப்புமல் தேவிந்த குமார என்னும் நபருக்கே பிணை வழங்கப்பட்டுள்ளது.

5 இலட்சம் ரூபாய் பெறுமதியான சரீரபிணைியில் குறித்த நபர் விடுவிக்கப்பட்டுள்ளார். கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலபிட்டிய, இந்த உத்தரவை இன்று வியாழக்கிழமை பிறப்பித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .