2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

ஜனாதிபதியின் இரண்டாம் வருடம்: ‘உற்சவங்கள், களியாட்டங்கள் வேண்டாம்’

Kogilavani   / 2016 நவம்பர் 17 , மு.ப. 03:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

-அழகன் கனகராஜ்

பதவிப் பிரமாணத்தின் இரண்டாம் வருடப் பூர்த்திக் கொண்டாத்தை, உற்சவங்கள், களியாட்டங்கள் இன்றிக் கொண்டாடுமாறு, ஜனாதிபதி மைத்தரிபால சிறிசேன அறிவுறுத்தியுள்ளார். நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில், நேற்றுப் புதன்கிழமை (16) இடம்பெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டின் போதே, அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான கயந்த கருணாதிலக, மேற்படி அமைச்சரவை முடிவைக் கூறினார்.  

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் இரண்டாம் வருடப்பூர்த்தி, 2017ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8ஆம் திகதியன்று கொண்டாடப்படும்.  

அதை தேவையற்ற உற்சவங்கள், களியாட்டங்கள் இன்றிக் கொண்டாடவும் 2017ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்ட யோசனைகளில், துரித கதியில் செயற்படுத்த வேண்டியவற்றை துரித கதியில் ஆரம்பிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.  
அத்துடன், பொது மக்களுக்கு மிகவும் பயனுள்ள அபிவிருத்தி வேலைத் திட்டத்தை முன்னெடுக்குமாறு அரச நிறுவனங்களுக்கு, ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.   


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .