2025 ஓகஸ்ட் 07, வியாழக்கிழமை

ஜனாதிபதியை ஒரு பெண்ணுடன் இணைத்து வெளியாகும் பதிவுகள்

Freelancer   / 2025 ஓகஸ்ட் 07 , பி.ப. 08:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை, ஒரு பெண்ணுடன் இணைத்து சமூக ஊடகங்களில் பகிரப்படும் பதிவுகள் தொடர்பாக ஜனாதிபதியின் அறிவுறுத்தலின் பிரகாரம், சட்டத்தரணி அகலங்க உக்வத்தே குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

குறித்த பதிவுகள், ஜனாதிபதியின் நற்பெயர் மற்றும் குணத்திற்குக் களங்கம் விளைவிக்கும் நோக்கில், தவறான வழியில், அவதூறான உள்ளடக்கத்தைக் கொண்டிருப்பதாக, முறைப்பாட்டை அளித்த சட்டத்தரணி கூறியுள்ளார். 

அதற்கமையை, குறித்த பதிவுகளுக்குப் பொறுப்பான சமூக ஊடகக் கணக்குகளைச் செயற்படுத்துபவர்கள் மீது விசாரணை நடத்த வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

அத்துடன், இந்தப் பதிவுகள் முற்றிலும் ஆதாரமற்றவை என்பதுடன், சமூகத்தைத் தவறாக வழிநடத்தும் எனச் சட்டத்தரணி அகலங்க உக்வத்தே தெரிவித்துள்ளார். R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .