2025 ஜூலை 10, வியாழக்கிழமை

’ஜனநாயகத்தை கொள்ளையடிக்கிறார் மைத்திரி’

Editorial   / 2018 நவம்பர் 10 , மு.ப. 10:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமையை நிராகரித்துள்ள ஐக்கிய தேசியக் கட்சி, ஜனாதிபதி மைத்திரிபால சிறி​சேன மக்களின் உரிமைகளையும் நாட்டின் ஜனநாயகத்தையும் கொள்ளையடித்து வருகிறார் என்று குறிப்பிட்டுள்ளது.

இது தொடர்பாக, கட்சியின் உத்தியோகப்பூர்வ டுவிட்டர் வலைதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேவின் இந்த தொடர்ச்சியான நகர்வு தொடர்பாக, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேஷப்பிரியவுடன் கலந்துரையாடவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்தோடு, நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமையை, முற்றாக தங்களது கட்சி நிராகரிப்பதாகவும் இந்த நாடாளுமன்ற கலைப்புச் செயற்பாடானது, சட்டவிரோதமானது என்றும் அரசமைப்புக்கு முற்று முழுதாக எதிரானது என்றும் குறிப்பிட்டுள்ளது.

மேலும், நாட்டின் ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்காக, உயர்நீதிமன்றத்தை நாவுள்ளதாகவும்  மக்கள் அனுபவித்து வந்த ஜனநாயகத்தை, இந்த புதிய அரசாங்கம் கொள்ளையடித்து வருவதாகவும் அந்த டுவிட்டர் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .