2025 டிசெம்பர் 18, வியாழக்கிழமை

ஜனவரி முதல் மின்சார கட்டண அதிகரிப்பு

Freelancer   / 2022 டிசெம்பர் 21 , பி.ப. 04:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

எதிர்வரும் ஜனவரி மாதம் மின்சாரக் கட்டணங்கள் நிச்சயமாக திருத்தப்படும் என்று மின்சக்தி மற்றும் வலுச்சக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர உறுதிப்படுத்தினார்.

கொழும்பில் புதன்கிழமை (21) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே மேற்குறிப்பிட்ட விடயத்தை அவர் தெரிவித்தார்.

மின்சார கட்டணத்தை திருத்துவதற்கான தேவையான விவரங்கள் மற்றும் அறிக்கை என்பன ஜனவரி 2 ஆம் திகதி அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

மின்சாரக் கட்டணத்தை திருத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு சட்டமா அதிபர் ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

அதற்கிணங்க அமைச்சரவை மற்றும் அமைச்சராகச் செயற்பட்டு அந்தப் பரிந்துரைகளுக்கு அமைவாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் அவற்றை முன்வைக்கவுள்ளதாகவும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X