Freelancer / 2026 பெப்ரவரி 20 , மு.ப. 09:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் அபுதாபியின் முடிக்குரிய இளவரசர் ஷேக் காலித் பின் முகமது பின் சயீத் அல் நஹ்யான் ஆகியோருக்கு இடையிலான உத்தியோகபூர்வ இருதரப்புப் பேச்சுவார்த்தை நேற்று (19) மாலை நடைபெற்றது.
இந்தியாவின் புதுடில்லியில் தற்போது நடைபெற்று வரும் 'AI Impact 2026' சர்வதேச உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக இரு நாட்டுத் தலைவர்களும் அங்கு வருகை தந்துள்ள நிலையிலேயே, இந்த முக்கிய சந்திப்பு இடம்பெற்றது.
இந்தக் கலந்துரையாடலின் போது, இலங்கை மற்றும் ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு இடையிலான பொருளாதார உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்துத் தலைவர்கள் விரிவாக ஆராய்ந்தனர். குறிப்பாக, எரிசக்தித் துறை, முதலீடுகள் மற்றும் நவீன தொழில்நுட்பப் பரிமாற்றம் ஆகியவற்றில் இரு நாடுகளும் இணைந்து செயற்படுவது குறித்து இதன்போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது. (a)

24 minute ago
59 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
59 minute ago
2 hours ago