2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

‘ஜனாதிபதி அரசமைப்புக்கு அமைய செயற்பட்டிருந்தால் பிரச்சினைகளை தீர்த்திருக்க முடியும்’

Editorial   / 2018 டிசெம்பர் 05 , பி.ப. 12:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரசமைப்புக்கு அமைய ஜனாதிபதி செயற்பட்டிருந்தால் இன்று நாட்டில் ஏற்பட்டுள்ள பிரச்சினையை தீர்த்திருக்க முடியுமென்று மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

இன்று நாடாளுமன்றத்தில் ஒத்திவைப்பு பிரேரணையொன்றை சமர்ப்பித்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அரசமைப்பை ஒரு பக்கமாகப் போட்டு விட்டு செயற்படும் ஜனாதிபதியால் இன்று உலக நாடுகளுக்கிடையில் இருந்த வரவேற்பு இல்லாமல் செய்யப்பட்டுள்ளது என்றார்.

ஸ்ரீ லங்கன் விமான நிறுவனத்தின் வருமானம் முற்றாக வீழ்ச்சியடைந்துள்ளது. இந்நாட்டின் பொருளாதாரம் மற்றும் இராஜதந்திர செயற்பாடுகளுக்கு சேதம் ஏற்படும் வகையில் ஜனாதிபதியால் செயற்பட முடியாது என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .