2025 ஒக்டோபர் 31, வெள்ளிக்கிழமை

ஜனாதிபதி இறந்து விடுவாரென ஆருடம் கூறியவர் வழக்கிலிருந்து விடுதலை

Editorial   / 2019 ஜனவரி 31 , பி.ப. 03:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

இணையத்தளம் ஊடாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இறந்து விடுவாரென  திகதி குறிப்பிட்டு ஆருடம் கூறியதாகக் குற்றச்சுமத்தப்பட்டிருந்த, ​ஜோதிடர் விஜித ரோஹன விஜயமுனியை குறித்த வழக்கிலிருந்து விடுதலை செய்ய கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரத்னவால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சட்டமா அதிபரின் ஆலோசனையைக் கவனத்தில் எடுத்தே குறித்த ஜோதிடருக்கு எதிராக மேலதிக சட்டநடவடிக்கைகள் எடுக்காமல் அவரை இந்த வழக்கிலிருந்து விடுதலை செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஜோதிடர் விஜித ரோஹன விஜயமுனி 2017ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 26ஆம் திகதி ஜனாதிபதி இறந்து விடுவாரென இணையத்தளம் ஊடாக பிரச்சாரங்களை மேற்கொண்டாரென, இவருக்கு எதிராக பொலிஸார் வழக்குத் தாக்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X