2026 ஏப்ரல் 27, திங்கட்கிழமை

ஜனாதிபதி கோட்டாவுடன் மேலும் இருநாடுகள் கைகோர்ப்பு

Editorial   / 2019 டிசெம்பர் 04 , மு.ப. 11:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவுடன் இணைந்து பயணிப்பதற்கு, ஐக்கிய அரபு இராஜ்ஜியம், நியூஸிலாந்து ஆகிய நாடுகள் உறுதியளித்துள்ளன.

இதன்படி, இலங்கைக்கான ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தின் உயர்ஸ்தானிகர் எச்.இ.அஹமட் அலி அல் முஅல்லா, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை, ஜனாதிபதி செயலகத்தில், நேற்று (3) சந்தித்தார்.

ஜனாதிபதியுடன் கலந்துரையாடிய அவர், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்தி, எதிர்காலத்தில் ஒத்துழைப்புடன் செயற்படுவதற்கு அர்ப்பணிப்புடன் செயலாற்ற உள்ளதாக உறுதியளித்தார்.

மேலும் ஜனாதிபதி கோட்டாபயவின் புதிய தொலைநோக்குடனான நிகழ்ச்சித் திட்டங்களைப் பாராட்டிய உயர்ஸ்தானிகர், அதனை வெற்றிபெறச் செய்வதற்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதாகவும் தெரிவித்தார்.

இதேவேளை, இலங்கைக்கான நியூசிலாந்து நாட்டின் உயர்ஸ்தானிகர் ஜோன்னா கேம்பர்ஸ் தலைமையிலான குழுவினரும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவை, ஜனாதிபதி செயலகத்தில் நேற்று (3) சந்தித்ததுடன் வாழ்த்துகளையும் தெரிவித்தனர்.

இரு நாடுகளுக்குமிடையிலான உறவுகளை மேலும் பலப்படுத்தி, பரஸ்பர நன்மைகளை அதிகரிப்பதற்கு அர்ப்பணிப்புடன் பணியாற்ற உள்ளதாக இதன்போது அவர்கள் உறுதிமொழி வழங்கியுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .