Freelancer / 2021 ஓகஸ்ட் 15 , பி.ப. 04:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையில் மோசமடைந்து வரும் கொரோனா நிலைமை குறித்து கலந்துரையாடுவதற்கு அனைத்துக் கட்சித் தலைவர்களின் கூட்டத்துக்கு உடனடியாக அழைப்பு விடுக்குமாறு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் பாராளுமன்ற உறுப்பினர் ரணில் விக்கிரமசிங்க கோரிக்கை விடுத்துள்ளார்.
இறப்புகளின் எண்ணிக்கையைக் குறைப்பது, சுகாதார அமைப்பைப் பாதுகாப்பது மற்றும் அனைவருக்கும் சுகாதாரப் பாதுகாப்பு வழங்கும் ஒரு திட்டத்திற்கு நாம் உறுதியளிக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நடத்தப்படும் கூட்டத்தில் அனைவரும் விவாதித்து ஒருமித்த கருத்துக்கு வரலாம் என்றும் கட்சித் தலைவர்களின் கூட்டத்தைக் கூட்டுவதற்கு இதுவே சரியான தருணம் என்று தான் நினைப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இன்று அவர் வெளியிட்ட காணொளியிலேயே இவ்விடயங்களை அவர் தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்றுநோய் நாட்டில் வேகமாக பரவி வருகிறது. மொத்த இறப்பு எண்ணிக்கை இப்போது 5,000 ஐ தாண்டியுள்ளது. உலக சுகாதார அமைப்பின் இலங்கை அலுவலகத்தைச் சேர்ந்த ஒரு சுயாதீன நிபுணர் குழு இலங்கையில் இறப்பு எண்ணிக்கை 30,000 ஆக உயரலாம் என்று பரிந்துரைத்துள்ளது என்ற விடயத்தையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
உலக சுகாதார அமைப்பின் பிரதிநிதிகள், மே மாதத்தில் சில நடவடிக்கைகளை இலங்கை அரசாங்கம் எடுத்திருந்தால் 12,000 மரணங்களைத் தடுத்திருக்க முடியும் என்று தங்கள் அறிக்கையில் கூறியுள்ளனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கம் நடிவடிக்கைகளை எடுத்தால் மேலும் 18,000 உயிர்களை காப்பாற்ற முடியும் என்று சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
3 hours ago
3 hours ago
3 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
3 hours ago
7 hours ago