Editorial / 2019 ஜூன் 01 , மு.ப. 09:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்த வருட இறுதியில் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது குறித்து இன்னும் தீர்மானிக்கவில்லை என, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் 15ஆவது பிரதமராக, இரண்டாவது முறையாகவும் பதவியேற்ற பிரதமர் நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவுக்கு, இந்தியா சென்றிருந்த ஜனாதிபதி, அங்கு உரையாற்றும் போதே, மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் அங்கு மேலும் கூறியுள்ளதாவது,
எதிர்வரும் டிசெம்பர் மாதம் 7ஆம் திகதி, இலங்கையில் ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ளதாகவும் தேர்தலில் போட்டியிடுவதா இல்லையா என்ற தீர்மானத்தை இன்னும் தான் எடுக்கவில்லை என்றும் கூறியுள்ளார்.
தேர்தலுக்கு இன்னும் நாள்கள் உள்ளது என்பதால், இலங்கையிலுள்ள எந்தவொரு அரசியல் கட்சியும் ஆளுங்கட்சியும் எதிர்க்கட்சியும் வேட்பாளர்களைத் தெரிவு செய்யவில்லை என்றும் அதனால் தனக்கும் அவசரமில்லை என்றும் கூறியுள்ள அவர், ஏனைய கட்சிகள் தெரிவு செய்யும் வரை, தானும் தனது தீர்மானம் குறித்து காத்திருக்கப்போவதாக கூறியுள்ளார்.
4 hours ago
4 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
6 hours ago