2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

ஜனாதிபதியால் பரிந்துரைக்கப்பட்ட பெயர் நிராகரிப்பு

Editorial   / 2019 ஜனவரி 25 , பி.ப. 12:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவராக நியமிக்குமாறு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால், பரிந்துரைக்கப்பட்டவரின் பெயர், அரசமைப்பு சபையினால் இரண்டாவது தடவையாகவும் நிராகரிக்கப்பட்டுள்ளது.

சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கூடிய அந்த அரசமைப்பு சபையில், சகல உறுப்பினர்களும் பங்கேற்றிருந்தனர்.

மேன்முறையீட்டு நீதிமன்றத் தலைவராக நியமிக்குமாறு, ஜனாதிபதியால் இதற்கு முன்னர் அனுப்பிவைக்கப்பட்ட பெயர், அந்த சந்தர்ப்பத்திலேயே நிராகரிக்கப்பட்டது. எனினும். இரண்டு வாரங்களுக்குப் பின்னர், அதே பெயரை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அர​சமைப்பு ​சபைக்கு அனுப்பிவைத்துள்ளாரென அறியமுடிகின்றது.

மேன்முறையீட்டு நீதிமன்றத்துக்கான தலைவர் வெற்றிடம் தொடர்பில், அரசமைப்பு சபை நீண்டநேரம் கலந்தாலோசித்தது. அதன் பின்னரே, ஜனாதிபதியினால் அனுப்பிவைக்கப்பட்ட பெயரை அந்த சபை நிராகரித்ததது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .