Editorial / 2020 ஜூலை 11 , பி.ப. 01:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையை ஒக்டோபரில் நடத்துமாறு சிலமாணவிகள் முன்வைத்த கோரிக்கையை கல்வி அமைச்சரின் கவனத்துக்குக் கொண்டு வருவதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
உடுநுவர தவுலகல அலப்பலாவிய விளையாட்டரங்கில் ஏற்பாடு செய்திருந்த மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டபோதே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் கண்டி மாவட்ட வேட்பாளர்களை ஆதரித்து கண்டியில் இன்று பல்வேறு மக்கள் சந்திப்புக்களில் ஜனாதிபதி கலந்துகொண்டுள்ளார்.
பொதுஜன முன்னணியுடன் அண்மையில் இணைந்த, நாவலப்பிட்டி கங்க இகல கோரலே பிரதேச சபையின் 08 ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்களும் பஸ்பாகே கோரலை பிரதேச சபையின் 02 உறுப்பினர்களும் ஜனாதிபதி இதன்போது சந்தித்து, ஜனாதிபதியின் வேலைத் திட்டங்களுக்கு முழுமையான ஆதரவை வழங்குவதாக உறுதியளித்தனர்.
தேயிலை கொழுந்துக்கு நியாயமான விலையை பெற்றுத்தர உதவுமாறு நாவலப்பிட்டி பேருந்து நிலையத்துக்கு முன்பாக ஏற்பாடு ய்யப்பட்டிருந்த மக்கள் சந்திப்பில் கலந்துகொண்ட
ஜனாதிபதியிடம் தொழிலாளர் கோரிக்கை ஒன்றையும் முன்வைத்துள்ளனர்.
உள்நாட்டு விவசாயிகளை பாதுகாக்க அரசாங்கம் பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது. அதில் தேயிலைக் கைத்தொழிலை பாதுகாக்க முக்கியத்துவமளிக்கப்பட்டு இருப்பதாகவும்
ஜனாதிபதி இதன்போது தெரிவித்தார்.
நாவலப்பிட்டி பிரதேச மக்கள் முகங்கொடுத்துள்ள காணி பிரச்சினைகள் தொடர்பாகவும் ஜனாதிபதி தெரிவிக்கப்பட்டுள்ளதோடு, காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவின் தலைவருடன் கலந்துரையாடி அதற்கு தீர்வை பெற்றுக்கொடுக்குமாறு ஜனாதிபதி முன்னாள் எம்.பி மஹிந்தானந்த அழுத்கமவிடம் தெரிவித்தார்.
தோட்டப்பகுதி பிள்ளைகளுக்கு நாவலப்பிட்டியில் உயர் கல்வி நிறுவனமொன்றையும் தொழிநுட்ப கல்லூரி ஒன்றையும் பெற்றுத் தருமாறு முன்வைக்கப்பட்ட கோரிக்கை குறித்தும் ஜனாதிபதி இதன்போது கவனம் செலுத்தினார்.
21 minute ago
32 minute ago
39 minute ago
58 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
32 minute ago
39 minute ago
58 minute ago