Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 05, சனிக்கிழமை
Editorial / 2018 டிசெம்பர் 11 , மு.ப. 11:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜனாதிபதியால் நாடாளுமன்றத்தைக் கலைப்பதாகத் தெரிவித்து வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை இரத்துச் செய்யுமாறு தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தொடர்பான விசாரணைத் தீர்ப்பை விரைவாக வழங்குமாறு, ஜனாதிபதி விடுத்துள்ள கோரிக்கைக்கு எதிராக உயர்நீதிமன்றில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சட்டத்தரணி அருண லக்சிறி என்பவரால் இந்த மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
குறித்த தீர்ப்பை உடனடியாக வழங்குமாறு ஜனாதிபதி சட்டமா அதிபர் ஊடாக பிரதம நீதியரசரிடம் கோரியிருப்பதாக ஊடகங்கள் வாயிலாக தகவல்கள் வெ ளியாகியுள்ளதாக சட்டத்தரணி அருண லக்சிறியின் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் இவ்வாறான கோரிக்கை வழக்கின் விசாரணைகளுக்கு இடையூறை ஏற்படுத்துமெனவும் அவரது மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எனவே இந்த வழக்கு தொடர்பாக சுயாதீனமாக செயற்பட்டு உரிய தீர்வை உயர்நீதிமன்றம் பெற்றுத்தர வேண்டுமென்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
36 minute ago
41 minute ago
4 hours ago