2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

‘ஜனாதிபதியின் தீர்மானங்கள் நாட்டை பாதிக்கின்றன’

Editorial   / 2019 ஜனவரி 03 , மு.ப. 11:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் எடுக்கப்படும் தீர்மானங்கள் நாட்டின் பொருளாதாரம் உள்ளிட்ட விடயங்களில் பாரிய பாதிப்பை ஏற்படுத்துவதாக பொருளாதார அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் நிரோஷன் பெரேரா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் நாட்டு மக்களின் அபிப்ராயங்களைப் பெறுவதற்காக இந்த வருடத்துக்குள் வைக்க வேண்டிய மிக முக்கியமானத் தேர்தல் ஜனாதிபதித் தேர்தலென்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் பழைய முறையிலாவது மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு தமது கட்சி விருப்பத்தைத் தெரிவித்துள்ளதாகவும் பொருளாதார அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் நிரோஷன் பெரேரா தெரிவித்துள்ளார்.

தனது அமைச்சின் கடமைகளைப் பொறுப்பேற்றப் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .