Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 02, வெள்ளிக்கிழமை
R.Maheshwary / 2021 ஜூலை 11 , மு.ப. 10:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜப்பானில் தொழில் பெற்றுத் தருவதாகத் தெரிவித்து, நாட்டின் பல பிரதேசங்களிலுமுள்ள இளைஞர்களிடம் பல கோடி ரூபாய் நிதி மோசடி செய்த, பெண்ணொருவர், கடுவலை- கொரதொட்ட பிரதேசத்தில் வைத்து, நவகமுவ பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டார்.
இவ்வாறு கைதுசெய்யப்பட்ட பெண், தெஹியோவிட்ட பிரதேசத்தைச் சேர்ந்த 49 வயதானவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நவகமுவ பிரதேசத்தில் இரு இளைஞர்களிடம், 8 இலட்ச ரூபாய் பணத்தை மோசடி செய்துள்ளதாக செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கு அமையவே சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளுக்கு அமைய,குறித்த பெண், ஜப்பானில் தொழில் வாய்ப்பு பெற்றுத் தருவதாகத் தெரிவித்து,பலரிடம் நிதி மோசடி செய்துள்ளமை தொடர்பில், இவருக்கு எதிராக 32 முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் சில வழக்கு நடவடிக்கைகளில், இவர் நீதிமன்றை தவிர்த்து வந்த நிலையில், இவரை கைது செய்வதற்காக 17 பிடியாணைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago