Freelancer / 2026 ஜனவரி 07 , மு.ப. 03:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
'ஜெம் ஸ்ரீலங்கா 2026' இரத்தினக்கல் மற்றும் ஆபரண கண்காட்சி கொழும்பு சங்ரில்லா ஹோட்டலில் புதன்கிழமை (07) அன்று முற்பகல் 10.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
இதன் அங்குரார்ப்பண நிகழ்வில் பிரதம அதிதியாகப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய கலந்துகொள்ளவுள்ளார். தொடர்ந்து வியாழக்கிழமை (08) மற்றும் வெள்ளிக்கிழமை (09) இக் கண்காட்சி நடைபெறவுள்ளதாக Ceylon Gem and Jewellery Traders Association (CGJTA) தலைவர் ரிஸ்வான் நயீம் தெரிவித்தார். இலங்கையின் இரத்தினக்கல் மற்றும் ஆபரணத்துறையில் ஒரு புதிய மைல்கல்லாக இக்கண்காட்சி நோக்கப்படுகின்றமை விசேட அம்சமாகும்.
2000க்கும் அதிகமான உறுப்பினர்களைக் கொண்டுள்ள, இலங்கையின் மிகப் பெரிய இரத்தினக்கல் வர்த்தக சங்கமான Ceylon Gem and Jewellery Traders Association (CGJTA) மூலம் ஏற்பாடு செய்யப்படும் இக் கண்காட்சியானது, இலங்கையில் இரத்தினக்கல் மற்றும் ஆபரண துறையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மிகப்பெரிய கண்காட்சியாகும். இது ஜெம் ஸ்ரீலங்கா எனவும் அழைக்கப்படுகிறது.
சர்வதேச முக்கியத்துவம் மற்றும் மேம்பாட்டை நோக்கிய மிக முக்கியமான மைல்கல்லாக ஜெம் ஸ்ரீலங்கா மாற்றம் பெற்றுள்ளது. இக் கண்காட்சியானது மேலும் ஒரு படி உயர்வடைந்து கொழும்பு ஷங்கிரிலாவுக்கு இடமாற்றம் செய்யப்பட்டு, உலகளாவிய ரீதியில் பாரிய அபிவிருத்தி மாற்றத்தையும், தொடர்புகளையும் பெற்றுக்கொள்வது இதன் நோக்கமாகுமென ஜெம் ஸ்ரீலங்காவின் தலைவரும் கண்காட்சி ஏற்பாட்டாளர்களில் ஒருவருமான ஹில்மி காஸிம் தெரிவித்துள்ளார்.

2 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
9 hours ago