Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
R. Yasiharan / 2022 செப்டெம்பர் 02 , மு.ப. 11:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
இம்முறை கூடும் ஜெனிவா மனித உரிமைகள் பேரவையின் அமர்வின் போது, இலங்கையில் மனித உரிமைகளை பாதுகாப்பதற்காக அரசாங்கம் எடுத்துள்ள வேலைத்திட்டத்தின் முன்னேற்றம் குறித்தும், எதிர்காலத்தில் இலங்கை அரசாங்கம் முன்னெடுக்கவுள்ள வேலைத்திட்டங்களின் முன்னாயத்த நடவடிக்கைகள் குறித்து முன்வைக்கவேண்டிய விடயங்கள் தொடர்பிலும் வெளிவிவகாரத்துறை அமைச்சர் அலி சப்ரியும், நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவும் கலந்துரையாடியுள்ளனர்.
இலங்கையின் மனித உரிமைகளைப் பாதுகாத்தல், நல்லிணக்க செயற்பாடுகளை கட்டியெழுப்புதல், காணாமல்போனோர் தொடர்பாக கிடைக்கப்பெறும் முறைப்பாடுகளை விசாரணை செய்தல் மற்றும் உறுதிப்படுத்தப்பட்ட நபர்களுக்கும், சொத்து சேதங்களுக்குமான இழப்பீடுகளை வழங்குதல், பாதுகாப்புப் படையினரின் வசமுள்ள தனியார் காணிகளை விடுவித்தல் மற்றும் இந்த செயற்பாடுகளுடன் தொடர்புடைய நிறுவனங்களின் முன்னேற்றம் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது. மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்காக நிறுவப்பட்ட நிறுவனங்கள் எதிர்காலத்தில் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது பற்றியும் இதில் கலந்துரையாடியுள்ளனர்.
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago