Editorial / 2019 ஏப்ரல் 24 , மு.ப. 07:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு, சென்னை மெரினா கடற்கறையில் நினைவிடம் அமைப்பதற்கு எதிராக தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு, சென்னை மெரினா கடற்கரையில் நினைவிடம் அமைக்கப்படுவதைத் தடை செய்யக்கோரி, ரவி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
அதை எதிர்த்து ரவி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். அதில் சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா குற்றவாளியே என்றும் அவர் மரணமைடைந்ததால், அவர் மீதான தண்டனை அறிவிக்கப்படவில்லை என்றும் கூறியிருந்த ரவி, ஜெயலலிதாவுக்கு மெரினா கடற்கரையில் நினைவிடம் அமைக்கும் தமிழக அரசாங்கத்தின் நடவடிக்கைக்கு தடைவிதிக்க வேண்டும் எனக் கூறியிருந்தார்.
அந்த மனு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, இந்த விவகாரத்தில் தலையிட விரும்பவில்லை எனக்கூறி ரவியின் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
4 hours ago
4 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
6 hours ago