Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 07, திங்கட்கிழமை
Editorial / 2018 நவம்பர் 26 , பி.ப. 04:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜோய் 29 வயதுடைய நபர் குறித்தத் தகவல்களை இந்தியாவிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகர் அலுவலகம் கோரியுள்ளது. குறித்த நபர் தற்சமயம் இந்தியா பொலிஸாரின் பொறுப்பில் உள்ள நிலையில், இலங்கையிலுள்ள தனது பெற்றோரைத் தேடுவதற்காக இலங்கைக்குச் செல்வதற்கான அனுமதியைப் பெற்றுத் தருமாறு இந்திய உயர்ஸ்தானிகர் அலுவலகத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
ஜோய் என்ற குறித்த நபர் 5 வயது சிறுவனாக இருக்கும் போது தனது மாமாவால் இந்தியாவுக்கு எடுத்துச் செல்லப்பட்டதாகவும், அவரது பெற்றோர் கொழும்புக்கு அருகிலுள்ள ஓரிடத்தில் கத்தோலிக்க தேவாலயத்துக்கு முன்பாக வசித்து வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனது தந்தையின் பெயர் பில்லு, தாயின் பெயர் மன்கோ என்றும் தனது தந்தை மீன்பிடித் தொழில் செய்பவரென்றும் ஜோய் தெரிவித்துள்ளார்.
எனவே குறித்த நபரின் பெற்றோர் தொடர்பில் தகவல் அறிந்தவர்கள் 0112- 2451397 அல்லது 0112- 2432457 என்ற தொலைபேசி இலக்கங்களுக்கு அறிவிக்குமாறும் பொலிஸ் ஊடகப் பிரிவு செய்தி வெளியிட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago