2025 ஓகஸ்ட் 23, சனிக்கிழமை

ஞானசார தேரருக்கு பிணை

Kanagaraj   / 2016 பெப்ரவரி 23 , மு.ப. 11:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

காணாமல்போன ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவின் மனைவியை தூற்றினார் என்ற குற்றச்சாட்டின் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பொதுபலசேனாவின் பொதுச்செயலாளர் ஞாசார தேரர், பிணையில் விடுவிக்கப்பட்டார்.

இரண்டு இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீர பிணைகளிலேயே அவர், விடுவிக்கப்பட்டார்.

இந்த வழக்கு, ஹோமாகம நீதவான் நீதிமன்றத்தில், செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்டபோதே, மேற்கண்டவாறு உத்தரவிட்ட நீதவான் ரங்க திஸாநாயக்க, சாட்சியாளர்களை அச்சுறுத்தக்கூடாது என்றும் கட்டளையிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X