Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 03, சனிக்கிழமை
Editorial / 2018 ஜூன் 20 , மு.ப. 08:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
கடூழியச் சிறைத்தண்டனை உத்தரவின் பிரகாரம், வெலிக்கடை சிறைச்சாலையில் தண்டனை அனுபவித்து வரும் பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரால் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனுவை, எதிர்வரும் 22ஆம் திகதி பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ள, நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
இந்த மேன்முறையீட்டு மனுவை பரிசீலனைக்கு எடுத்துகொள்வதற்கு, ஹோமாகம நீதவான் உதேஷ் ரணதுங்க, நேற்று (19) தீர்மானித்தார். அதனடிப்படையில், இந்த மனு, எதிர்வரும் 22ஆம் திகதியன்று பிற்பகல் 2 மணிக்கு அழைக்கப்படுமென, நீதவான் அறிவித்தார்.
காணாமலாக்கப்பட்டுள்ள ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவின் மனைவி சந்தியா எக்னெலிகொடவை, கடந்த 2016ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 25ஆம் திகதியன்று, திட்டித்தீர்த்து அச்சுறுத்தினார் மற்றும் நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் செயற்பட்டார் என்ற குற்றச்சாட்டுகளில் குற்றவாளியாக இனங்காணப்பட்ட ஞானசார தேரருக்கு, 6 மாதங்கள் அனுபவிக்க வேண்டிய ஒருவருட கடூழிய சிறைத்தண்டனை, கடந்த 14ஆம் திகதியன்று விதிக்கப்பட்டது.
ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட, கடத்திச் செல்லப்பட்டுக் காணாமலாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள இராணுவப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த 9 பேரின் விளக்கமறியல், ஹோமாகம நீதவான் ரங்க திஸாநாயக்கவால், கடந்த 2016ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 25ஆம் திகதியன்று நீடிக்கப்பட்டது.
அந்த நேரத்தில், நீதிமன்ற வளாகத்திலிருந்த கலகொட அத்தே ஞானசார தேரர், நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் நடந்துகொண்டதுடன், சந்தியா எக்னெலிகொடவைத் திட்டித்தீர்த்து, அவரை அச்சுறுத்தினாரென்பது குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
39 minute ago
45 minute ago
2 hours ago
3 hours ago