2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

டின் மீன் கொள்வனவில் கவனம் வேண்டும்

George   / 2016 டிசெம்பர் 28 , மு.ப. 06:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

டின் மீன் கொள்வனவு செய்யும் போது,  அதன் லேபல் மற்றும் முடிவுத் திகதியை ​சோதித்துப் பார்த்து கொள்வனவு செய்யுமாறு நுகர்வோர் அதிகாரசபை, மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.

காலவதியான மீன் டின்களில் புதிய லேபல் ஒட்டி விநியோகிக்கப்பட்ட வியாபாரம் தொடர்பில் தகவல்களை வௌிக்கொண்டுவர நுகர்வோர் அதிகாரசபை அதிகாரிகளுக்கு முடிந்துள்ளது என, அதன் தலைவர் ஹசித திலகரத்ன தெரிவித்துள்ளார்.

இவ்வாறு பழுதடைந்த டின் மீனை விற்பனை செய்பவர்கள் தொடர்பில் தகவல் தெரிந்தால், நுகர்வோர் அதிகாரசபைக்கு அறிவிக்குமாறு அந்த சபை கேட்டுக்கொண்டுள்ளது.

இதனைத்தவிர, இவ்வாறான டின் மீன்களை சந்தைப்படுத்தும் ​விற்பனை பிரதிநிதிகள் தொடர்பில் அவதானத்துடன் இருக்குமாறு வியாபாரிகளிடம் அந்த சபை கேட்டுக்கொண்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .