2024 மே 08, புதன்கிழமை

’டக்ளஸ் எடுக்கும் நடவடிக்கைக்கு கூட்டமைப்பு துணைநிற்கும்’

Niroshini   / 2021 ஒக்டோபர் 14 , பி.ப. 02:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தமது மீனவர்களை காப்பாற்ற வேண்டிய நடவடிக்கையில் இறங்க வேண்டும் எனத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், அதற்கான நடவடிக்கைளை அவர் எடுக்கும் போது, அவருடன் சேர்ந்து செயற்பட தயாராக இருக்கிறோம் எனவும் கூறினார்.

அத்துடன், இந்திய இழுவைப் படகுகாளால் பாதிக்கப்பட்ட தமது மீனவர்களுக்கு உரிய நட்டஈடு வழங்கப்பட வேண்டும் எனவும், அவர் வலியுத்தினார்.

மன்னாரில், இன்று (14) காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்துரைத்த அவர், உர விவகாரம் தொடர்பில் அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானாத்தால், இலங்கை பாரிய பஞ்சத்தை எதிர்நோக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது என்றார்.

'விவசாயிகளுக்கு உரத்த வழங்கி விவசாயத்தை ஊக்குவிக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். விவசாயிகளுடனும், விவசாய அமைப்புக்களுடனும் கலந்துரையாடி வருகிறோம்' எனவும், அவர் தெரிவித்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X