Editorial / 2024 நவம்பர் 25 , பி.ப. 05:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
முன்னாள் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கொழும்பு நீதிவான் நீதிமன்றில் அவரது சட்டத்தரணிகளுடன் ஆஜராகி பிடிவிறாந்தில் இருந்து விடுவிக்கப்பட்டு வழக்கு ஜனாதிபதி மாதம் பிற்போடப்பட்டுள்ளது.
கடந்த சில வருடங்களுக்கு முன்னர் சு. மனோகரன் , கொழும்பு வெள்ளவத்தையைச் சேர்ந்த வர்த்தக ஒருவருக்கு ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா 20 மில்லியன் தொகை பணத்தை கடனாக கொடுத்தார்.
இதில் கடனை பெற்ற சு. மனோகரன் மோசடியான காசோலையை முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கு வழங்கியிருந்தார் ,
இது ஒரு மோசடியான காசோலை என அறிந்த முன்னாள் அமைச்சர் நீதிமன்றில் முறைப்பாடு செய்து தற்போதும் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றது. கடந்த மூன்று வெவ்வேறு சந்தர்ப்பங்களில் முன்னாள் அமைச்சரை சாட்சி சொல்ல நீதிமன்றம் கோரியிருந்தது. ஆனால் அந்த சந்தர்பங்களில் தேர்தல் வேலைகள் மற்றும் உடல்நல குறைவால் அவற்றில் கலந்து கொள்ள முடியாமல் போனமை குறிப்பிடத்தக்கது.
7 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago