Freelancer / 2023 மே 30 , பி.ப. 05:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாட்டின் பொதுப் போக்குவரத்து முறையை டிஜிட்டல் மயமாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்து அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான தெரிவித்தார்.
செவ்வாய்க்கிழமை (30) இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பிலேயே மேற்குறிப்பிட்ட விடயத்தை அவர் தெரிவித்தார்.
மீதி தொகையை சில்லறைகளில் வழங்குவதில் உள்ள சிரமம், நடத்துனர்கள் மற்றும் பயணிகளுக்கு சிரமத்தை ஏற்படுத்துவதாக குறிப்பிட்ட அமைச்சர், ஏனைய நாடுகளில் பஸ் நடத்துனர்கள் இல்லை என்றும் அட்டை முறை மூலம் பணம் செலுத்தப்படுகிறது என்றும் குறிப்பிட்டார்.
தற்போது, 12நிறுவனங்கள் டிஜிட்டல் மயமாக்கும் திட்டத்திற்கான முன்மொழிவுகளை ஏற்கெனவே சமர்ப்பித்துள்ளன என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
4 hours ago
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago
6 hours ago