Freelancer / 2026 ஜனவரி 07 , மு.ப. 02:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
'டிட்வா' புயல் தொடர்பில் முன்கூட்டி நடவடிக்கை எடுக்கத் தவறியமை தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக அமைக்கப்படவுள்ள விசேட செயற்குழுவின் தலைமைப் பொறுப்பு எதிர்க்கட்சிக்கு வழங்கப்படவேண்டுமென எதிர்க்கட்சிகளின் பிரதம கொறடாவான கயந்த கருணாதிலக்க எம்.பி. வலியுறுத்தினார்.
பாராளுமன்றத்தில் செவ்வாய்க் கிழமை (06) அன்று விசேட கூற்றை முன்வைத்தே இதனை வலியுறுத்தினார்.
மேலும் அவர் பேசுகையில், அண்மையில் நாட்டில் பேரழிவை ஏற்படுத்திய 'டித்வா' புயல் அனர்த்தம் தொடர்பில் முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டதா அல்லது முன்னெச்சரிக்கை விடுத்தும் அரசு நடவடிக்கை எடுக்க தவறவிட்டதா? என்பதனை ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்கப் பாராளுமன்ற செயற்குழுவொன்றை அமைக்குமாறு 20 க்கும் மேற்பட்ட எதிர்க்கட்சி எம்.பிக்கள் கைச்சாத்திட்ட கடந்த மாதம் 18 ஆம் திகதி கையளிக்கப்பட்டது.
எனவே அரசாங்கம் அந்த செயற்குழுவை நீதியாக அமைப்பதாக இருந்தால், அந்த குழுவின் தலைமைப் பொறுப்பை எதிர்க்கட்சிக்கு வழங்க வேண்டும். இதற்கு முன்னரும் இவ்வாறான விசேட செயற்குழு அமைக்கப்பட்டபோது, எதிர்க்கட்சிக்கே அதன் தலைமைப் பதவி வழங்கப்பட்டது. எனவே, குறித்த செயற்குழுவுக்கு உறுப்பினர்களை நியமிக்கும்போது, எதிர்க்கட்சி உறுப்பினர்களின் தொகையை அதிகரித்து, எதிர்க்கட்சிக்குத் தலைமை பதவியை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். (a)
2 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
9 hours ago