2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

டுபாயிலிருந்து வந்த இளைஞன் விமான நிலையத்தில் கைது

Freelancer   / 2025 ஜூலை 15 , மு.ப. 09:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுமார் 7 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் சந்தேகநபர் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

டுபாயிலிருந்து வந்த குறித்த சந்தேகநபரிடம், மின்னணு சிகரெட்டுகளை சார்ஜ் செய்யப் பயன்படுத்தப்படும் ரசாயனப் பொருட்களும் இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இவர் விமான நிலையத்தை விட்டு வெளியேற முயன்றபோது அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவத்தில் கைதான 26 வயதான சந்தேகநபர் மாவதகமவில் வசிப்பவர், டுபாயில் உள்ள ஒரு உணவகத்தில் பல ஆண்டுகளாக பணியாற்றி வந்தார்.

சம்பவம் குறித்து சுங்க அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .