2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

டயனாவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

Freelancer   / 2025 ஏப்ரல் 24 , மு.ப. 11:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

டயனா கமகேவுக்கு எதிரான வழக்கு விசாரணையை எதிர்வரும் ஜூலை 31 ஆம் திகதிக்கு ஒத்திவைக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

செல்லுபடியான வீசா இன்றி இலங்கையில் தங்கியிருந்ததாக தெரிவித்து முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயனா கமகேவுக்கு எதிராக குடிவரவு, குடியகல்வு சட்டத்தின் கீழ் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் 7 குற்றப்பத்திரிகைகளைத் தாக்கல் செய்திருந்தது.

இந்த வழக்கு இன்று கொழும்பு பிரதான நீதவான் தனுஜா லக்மாலி முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவிருந்தது.

இருப்பினும் பிரதான நீதவான் தனுஜா லக்மாலி இன்று சமூகமளிக்காமையினால் குறித்த வழக்கு கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷன கெகுனவல முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. 

இதன்போது குறித்த வழக்கு தொடர்பான மேலதிக விசாரணைகளை ஜூலை 31 ஆம் திகதிக்கு ஒத்திவைக்க கொழும்பு மேலதிக நீதவான் உத்தரவிட்டுள்ளார். R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X