Janu / 2026 பெப்ரவரி 02 , மு.ப. 11:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
மட்டக்களப்பு, கட்குளம் பிரதேசத்தின் வளைவு ஒன்றில் வீதியோரமாக நின்றுக்கொண்டிருந்த ஒருவர், டிராக்டர் பெட்டியுடன் (Trailer) மோதி அதன் பின் சக்கரத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் ஞாயிற்றுக்கிழமை (01) இடம்பெற்றுள்ளது.
கிண்ணியா, இடிமன் பகுதியைச் சேர்ந்த கிண்ணியா அலிகார் வித்தியாலயத்தில் பணியாற்றும் ஆசிரியரான 58 வயதுடைய சாலிகீன் முஹம்மது மௌஜூத் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர் தனது நண்பர் ஒருவருடன் வீதியோரத்தில் பேசிக்கொண்டிருந்தபோது, கிண்ணியா நோக்கி அதிவேகமாக வந்த டிராக்டர் பெட்டி அவர் மீது மோதியுள்ளது. இதனால் கீழே விழுந்த அவர், டிராக்டரின் பின் சக்கரத்தில் சிக்கி அவ்விடத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
விபத்தின் பின்னர் டிராக்டர் சாரதி டிராக்டரை நிறுத்தாமல் செலுத்திச் சென்று கிண்ணியா பொலிஸில் சரணடைந்ததுள்ளார் . இது தொடர்பான மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
8 minute ago
16 minute ago
21 minute ago
21 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
16 minute ago
21 minute ago
21 minute ago