Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை
Editorial / 2018 டிசெம்பர் 28 , மு.ப. 11:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
51 வயதான “டிக்கி அக்கா” வை கைதுசெய்துள்ளதாகத் தெரிவித்த கொழும்பு, குற்றப்புலனாய்வு பிரிவினர், அந்த அக்கா, “களு அக்கா”வுடன் தொடர்புடையவர் என்றும், மாளிகாகந்த நீதிமன்றத்தில், டிக்கி அக்காவை ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தனர்.
கிராண்ட்பாஸ் அனுபஹே வத்சந்திக்கு அருகில் வைத்து கைதுசெய்யப்பட்ட அந்த பெண்ணிடம், 60 இலட்சம் ரூபாய் பெறுமதியான ஹெரோய்ன் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது என்றும் கொழும்பு குற்றப்புலாய்வுப் பிரிவின் அதிகாரிகள் தெரிவித்தனர்.
சந்தேகநபரான அந்த பெண்ணிடமிருந்து கைப்பற்றப்பட்ட 52 கிராம் 295 மில்லிகிராம் நிறையைக் கொண்ட அந்த ஹெரோய்ன், தொட்டலங்க களு அக்காவினுடையது என்றும், களு அக்கா, போதைப்பொருளை வைத்திருந்தார் என்றக் குற்றச்சாட்டின் கீழ், சிறைச்சாலையில் உள்ளார் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
7 hours ago