2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

டிஜிட்டல் மயப்படுத்த அரசாங்கம் அவதானம்

Freelancer   / 2023 மே 31 , பி.ப. 06:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையின் விவசாயத்துறை தரவுகளை டிஜிட்டல் மயப்படுத்துவது குறித்த கலந்துரையாடலொன்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில்  செவ்வாய்க்கிழமை (30) பிற்பகல் நடைபெற்றது.

குறித்த அரச நிறுவன அதிகாரிகளின் பங்களிப்புடன் நடைபெற்ற இந்தக் கலந்துரையாடலில் பில் அன்ட் மெலிண்டா கேட்ஸ் அமைப்பு உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

விவசாயத் துறையின் நவீனமயமாக்கல், போசாக்கு, காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வது மற்றும் நிதிப் பாதுகாப்பு ஆகிய துறைகளை அபிவிருத்தி செய்கையில் தரவு அடிப்படையிலான முடிவுகளை எடுப்பதற்கான அணுகுமுறை தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டதுடன், இது தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளை தொடருமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கினார்.

இதற்காக நிதியுதவி மற்றும் நவீன தொழில்நுட்பத்தை வழங்குவது தொடர்பான அரசாங்கத்தின் கொள்கைகள் மற்றும் விதிமுறைகளுக்கு உட்பட்டு இந்த நடவடிக்கைகளில் பங்களிப்பு வழங்க முடியும் என்று ஜனாதிபதியிடம் உறுதியளித்த பில் அன்ட் மெலிண்டா கேட்ஸ் அமைப்பின் அதிகாரிகள், அது பற்றிய விடயங்களை விரிவாக முன்வைத்தனர்.

மேலும், உத்தேச காலநிலை மாற்றம் தொடர்பான பல்கலைக்கழகத்தின் செயற்பாடுகள் குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .