2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

டிபென்டர் மோதிய சம்பவம்: 8 பேர் கைது

Editorial   / 2019 பெப்ரவரி 25 , பி.ப. 03:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

பம்பலப்பிட்டி- டுப்ளி புல்லர்ஸ் சந்தியில் நேற்று அதிகாலை (24) இடம்பெற்ற வாகன விபத்து தொடர்பில் 8 சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

நேற்று அதிகாலை பொரளை பொலிஸ் நிலைய போக்குவரத்து பொறுப்பதிகாரி மீது மோதிய டிபென்டர் வாகனம் பிரதேசத்திலிருந்து தப்பிச் சென்ற நிலையில், இது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகேவின் மகன் உள்ளிட்ட 8 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகேவின் மகனும் கொழுப்பு மாநகர சபை உறுப்பினர் துமிந்த சுதம்மிக ஆட்டிகல ஆகியோர் விபத்துக்குள்ளான டிபென்டரில் பயணித்துள்ளனர்.

அத்துடன் விபத்தை ஏற்படுத்திய ​டிபென்டர் வாகன சாரதியும் இதன் உரிமையாளரும் கைது செய்யப்பட்டுள்ளதுடன், இந்த டிபென்டர் வாகனத்துடன் பயணித்த மற்றுமொரு சொகுசு வண்டியில் பயணித்த மேலும் 4 சந்தேகநபர்களும் குற்றங்களையும் சாட்சிகளையும் மறைத்த குற்றச்சாட்டின் கீ​ழ் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்கள் 23- 28 வயதுக்கு இடைப்பட்டவர்களென்றும் இவர்கள் இன்றைய தினம் புதுக்கடை இலக்கம் 3 நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனரென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .