S.Renuka / 2026 மார்ச் 22 , பி.ப. 12:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
சுமார் 37,000 மெட்ரிக் தொன் டீசலை ஏற்றிய கப்பலொன்று எதிர்வரும் மார்ச் 25ஆம் திகதி இலங்கையை வந்தடையவுள்ளதாக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் விலை அதிகரிப்பு தொடர்பில் அரசாங்க தகவல் திணைக்களத்தில் தற்போது நடைபெற்று வரும் ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், “மார்ச் 7 மற்றும் 8 ஆம் திகதிகளில் 37,000 மெட்ரிக் தொன் பெற்றோலை ஏற்றிய கப்பலொன்று இலங்கைக்கு கொண்டு வரப்பட்டது. உலக சந்தையில் நிலவும் விலை அதிகரிப்பு இதிலும் உள்வாங்கப்பட்டுள்ளது.
அதேபோன்று, மார்ச் 25ஆம் திகதி 37,000 மெட்ரிக் தொன் டீசலை ஏற்றிய கப்பலொன்று வரவுள்ளது.
பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தற்போதும் பாரிய நட்டத்துடனேயே செயற்பட்டு வருவகின்றது.
அத்துடன், சனிக்கிழமை (21) அன்று மேற்கொள்ளப்பட்ட எரிபொருள் விலை அதிகரிப்பிற்கு மத்தியிலும், ஒரு லீற்றர் டீசலுக்கு 100 ரூபாவையும் ஒரு லீற்றர் பெற்றோலுக்கு 20 ரூபாவையும் அரசாங்கமே ஏற்றுக்கொண்டுள்ளதாகவும், இதற்காக அரசாங்கம் மாதம் ஒன்றுக்கு 20 பில்லியன் ரூபாயைச் செலவிடுவதாகவும் அமைச்சர் இங்கு மேலும் தெரிவித்தார். கூறியுள்ளார்.
30 minute ago
51 minute ago
52 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 minute ago
51 minute ago
52 minute ago
1 hours ago