Freelancer / 2021 செப்டெம்பர் 26 , பி.ப. 05:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையில் பரவியுள்ள கொரோனா வைரஸின் டெல்டா திரிபின் உப மாறுபாட்டுக்கு வைத்திய வல்லுநர்கள் வேறு பெயரைக் கொடுத்துள்ளனர் என்று ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, நோயெதிர்ப்பு மற்றும் செல் உயிரியல் பிரிவின் தலைவர் டொக்டர் சந்திம ஜீவந்தர தெரிவித்தார்.
அதன்படி, உப மாறுபாட்டுக்கு AY28 என்று அதிகாரப்பூர்வ பெயர் சூட்டப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
டெல்டா திரிபின் இந்த மாறுபாடு முதலில் ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் ஒவ்வாமை, நோயெதிர்ப்பு மற்றும் செல் உயிரியல் பிரிவால் அடையாளம் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்த உப வகையின் 382 மாதிரிகள் உலகின் பல்வேறு பகுதிகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன என்றும் அவற்றில் 228 இலங்கையில் காணப்படுகின்றன என்றும் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடம் அறிவித்துள்ளது.
42 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
42 minute ago
2 hours ago
2 hours ago