2025 ஜூலை 21, திங்கட்கிழமை

ட்ரம்ப் வரியை ரத்து செய்ய வேண்டும் : சீனா

Freelancer   / 2025 ஏப்ரல் 14 , மு.ப. 11:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பினால் விதிக்கப்பட்டுள்ள வரியை முற்றிலுமாக ரத்து செய்ய வேண்டும் எனச் சீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

உலக நாடுகள் பலவற்றுக்கான பரஸ்பரத் தீர்வை வரியை அமெரிக்க ஜனாதிபதி அண்மையில் அறிவித்தார். 

சீனாவுக்கு விதிக்கப்பட்ட வரிகளை 145 சதவீதமாக டொனால்ட் ட்ரம்ப் அதிகரித்துள்ளார். 

இந்த நிலையில், இந்த நடவடிக்கைக்குச் சீனா தமது எதிர்பை வெளியிட்டுள்ளது. 

அமெரிக்கா தமது தவறுகளைச் சரிசெய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். 

பரஸ்பர வரிகள் என்ற தவறான நடைமுறையை முற்றிலுமாக ரத்து செய்ய வேண்டும் எனச் சீனாவின் வர்த்தக அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X