2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

தேசிய கீதத்தில் பிரச்சினை வேண்டாம்

Gavitha   / 2016 பெப்ரவரி 02 , மு.ப. 03:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுதந்திரதின கொண்டாட்டத்தின் போது தேசிய கீதத்தை சிங்களத்திலும் தமிழிலும் பாடுவது தொடர்பில் பிரச்சினை ஏற்படுத்திக்கொள்ள வேண்டாம் எனவும் இதற்கு முன்னரும் சுதந்திரதினக் கொண்டாட்டங்களின் போது தேசிய கீதத்தை இரு மொழிகளிலும் பாடிய வரலாறுகள் உள்ளன என்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தன தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் போது, செய்தியாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர், 'சிங்களம் மற்றும் தமிழ் என்ற மொழிகள், இந்த நாட்டின் தேசிய மொழிகளாகும்.

நல்லாட்சி அரசாங்கத்தின் கீழ், தேசிய கீதத்தை அவரவர், தாங்கள் அறிந்த மொழிகளில் பாடும் உரிமையும் சுதந்திரமும் அவரவருக்கு உண்டு' என்றும் குறிப்பிட்டார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X