Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kogilavani / 2016 செப்டெம்பர் 23 , மு.ப. 04:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
கெலும்பண்டா, யொஹான்பெரேரா
நாட்டில் அதிக வருமானத்தை ஈட்டும் மூன்று பிரதான நிறுவனங்களின் தொழிற்சங்க நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டமைக்கு, அரசாங்கத்தின் தான்தோன்றித்தனமான நடவடிக்கைகளே காரணமென நேற்று வியாழக்கிழமை (22) குற்றஞ்சாட்டிய ஒன்றிணைந்த எதிரணி, இந்தத் தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக, நாளாந்தம் பல பில்லியன் ரூபாய் வருமானமிழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் குற்றஞ்சாட்டியது.
நேற்று வியாழக்கிழமை (22) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின்போதே, இந்தக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.
இலங்கையிலுள்ள உள்நாட்டு இறைவரித்திணைக்களம், சுங்கம் மற்றும் கலால் வரித்திணைக்களம் போன்றவை, தொழிற்சங்க நடவடிக்கைகளை கையிலெடுத்துள்ளதாக இணைந்த எதிரணியின் தலைவர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.
'இந்த மூன்று நிறுவனங்களின் நடவடிக்கைகளும் தற்போது ஸ்தம்பிதமடைந்துள்ளது. சுங்க கட்டளைச் சட்டத்தை திருத்துவதற்கானதொருதற்காலிகஅணுகுமுறையைஅரசாங்கம்நாடியுள்ளமையினாலேயே, இவ்வாறான தொழிற்சங்க நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
ஓய்வுபெற்ற அதிகாரிகள் பணிக்காக அழைக்கப்பட்டுள்ளமை தொடர்பில் நாம் கேள்வியுற்றோம்.சுங்ககட்டளைச் சட்டத்தை திருத்துவதற்கு, நியமிக்கப்பட்ட குழுவொன்றுடன் நிதியமைச்சர் செயற்பட்டுக்கொண்டிருக்கின்றார்.
தங்குமிடவசதிகள் அடங்கிய வெளிப்படையான செயல் முறைவேண்டும் என்றே தொழிற்சங்கவாதிகள் கோருகின்றனர்.
எனினும், அவர்களது தேவையை அரசாங்கம் நிறைவேற்றவில்லை. இவ்வாறான முக்கிய நிறுவனங்கள், நாட்டில் கட்டாயம் இயங்க வேண்டும். அவர்கள் முடமானால், நாட்டின் பொருளாதாரம் ஸ்தம்பிதமடையும். இதனால் ஒரு நாளைக்கு 1 பில்லியன் ரூபாய் வருமானமிழப்பீடு ஏற்படும்' என்று அவர் குறிப்பிட்டார்.
40 minute ago
43 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
40 minute ago
43 minute ago
1 hours ago