2025 ஓகஸ்ட் 10, ஞாயிற்றுக்கிழமை

துமிந்தவின் அறுவை சிகிச்சை புகைப்படங்கள் வெளியாகின

Princiya Dixci   / 2016 செப்டெம்பர் 14 , மு.ப. 10:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தொழிற்சங்க ஆலோசகருமான பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர கொலை வழக்கில், மரண தண்டணை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா, அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட புகைப்படங்களை அவரது சகோதரி, பேஸ்புக்கில் பதிவேற்றியுள்ளார்.

துமிந்த சில்வா, ஸ்ரீ ஜெயவர்தனபுர மற்றும் சிங்கப்பூரிலுள்ள எலிசபெத் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெறும் புகைப்படங்கள் உள்ளடங்களாக 17 புகைப்படங்களை, அவரது சகோதரி, தனது தனிப்பட்ட பேஸ்புக்கிலே இவ்வாறு பதிவேற்றியுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர, தனது தந்தையான பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர, தலையில் துப்பாக்கிச்சூடுபட்ட நிலையில் இருக்கும் புகைப்படத்தை, தனது பேஸ்புக்கில் முதல்முறையாக வெளிட்ட சில நாட்களிலேயே துமிந்த சில்வாவின் இந்தப் புகைப்படங்களும் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X