2025 மே 22, வியாழக்கிழமை

தையிட்டியிலும் வதை முகாமாம்?

Administrator   / 2015 டிசெம்பர் 31 , பி.ப. 11:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

சொர்ணகுமார் சொரூபன்

அதியுயர் பாதுகாப்பு வலயமாகவிருந்து கடந்த 29ஆம் திகதியன்று இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்ட வலிகாமம் வடக்கு, தையிட்டிப் பகுதியில் உள்ள வீடொன்றின் சீலிங், முட்;கம்பிகளினால் வேயப்பட்டுள்ளது.இதனால், அந்த வீடு இராணுவத்தினரின் வதை முகாமாக இயங்கியிருக்கலாம் என்ற அச்சம் நிலவுவதாக அங்குச்சென்று திரும்பியோர் தெரிவித்தனர்.

மேற்படி பகுதியில் இராணுவத்தினரின் பயிற்சி முகாம் ஒன்று இருந்துள்ளது. அந்தப் பயிற்சி முகாம் அங்கிருந்த வீடுகளை உடைத்து உருவாக்கப்பட்டிருந்தது. அத்துடன், சில வீடுகள் இராணுவத்தினரின்  தேவைகளுக்குப் பயன்படுத்தப்பட்டுள்ளன. அவ்வாறு இராணுவத் தேவைக்கு பயன்படுத்தப்பட்ட வீடுகள் தற்போது எஞ்சியுள்ளன.

எஞ்சியுள்ள வீடொன்றின் அறையானது, வதை முகாம் எனச் சந்தேகிக்கும் வகையில் அமைந்துள்ளது. கூரைப்பகுதியில் முட்கம்பி கொண்டு வேயப்பட்டுள்ளன. 

இதே அமைப்பிலான வதை முகாம் ஒன்று வரணிப் பகுதியில் அமைந்திருந்தஇராணுவ முகாமில் காணப்பட்டதாகவும், இராணுவம் அங்கிருந்து சென்ற பின்னர் அதனைத் தான் கண்டதாக தமிழ்;த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள்  நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X